Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் ”கோப்ரா”….. டப்பிங் குறித்து வெளியான அசத்தல் அப்டேட்…..!!!

‘கோப்ரா’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ”கோப்ரா”. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

chiyaan vikram cobra movie dubbing started ajay gnanamuthu ar rahman

இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ரோபோ ஷங்கர், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘கோப்ரா’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குனர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |