ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலி என்று கூறப்படும் அலினா கபேவா என்ற பெண்ணின் சொத்து மதிப்புகள் தொடர்பான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலியான, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஜிம்னாஸ்டிக்கில் ஓய்வு பெற்ற பின் அரசியல்வாதியாகவும் ஊடகத்துறையிலும் பதவி வகித்தார்.
கடந்த 2008-ஆம் வருடத்தில், அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என்று பேசப்பட்டார். மேலும், இவர்களுக்கு ஆண் குழந்தைகள் இரண்டு பேரும், இரட்டை பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் சுவிட்சர்லாந்தில் பாஸ்போர்ட் இருக்கிறது. இந்நிலையில், அலினாவின் சொத்து மதிப்பு $10 மில்லியன் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.