இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது தொடர்பான ஆலோசனை நேற்று நடந்திருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் 16 பேர் இந்தியா சென்றிருக்கிறார்கள். எனவே நேற்று அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்திருக்கிறது. அதில் தற்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை நடந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எஸ்.ஜே.பி என்னும் எதிர்க்கட்சி பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.