விராலிமலை சேர்ந்த சதிராட்ட பெண் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த முத்து கண்ணம்மாள் சதிராட்ட கலையில் தேர்ச்சி பெற்று கடைசி வாரிசாக இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 21ம் தேதி முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற முத்து கண்ணம்மாள் நேற்று விராலிமலைக்கு திரும்பி வந்தபோது ஊர் பொதுமக்கள் சார்பாக விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்திலிருந்து மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும் காரில் ஊர்வலமாக முக்கிய நகரங்களுக்கு வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வழியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்தி கௌரவித்துள்ளார்கள்.