முன்னாள் அமைச்சர் தென்னவன் தார்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் தார்ச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழ் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னதுறை, யூனியன் ஆணையாளர் சேவகன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியனின் நிதியில் இருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்ட்ட தார்சாலையை அமைச்சர் தென்னவன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியுள்ளார்.