தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகள் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்தது.
இதில் போலி நகைகளைக் கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. இதனால் தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது 48, 85,000 நபர்கள் நகை கடன் தள்ளுபடி விண்ணப்பித்தவர்களில் 13,30,000ஆயிரம் பேர் மட்டுமே தள்ளுபடி பெற தகுதியான நபர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்தார். அப்போது நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூபாய் 1,000 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,48,000 கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-க்கு பதில் 28 ஆம் தேதிக்குள்ளேயே அனைவருக்கும் தள்ளுபடி ரசீது தரப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.