தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆக குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூடுதலான சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது வரவேற்கப்பட வேண்டியதாகும். கேரள மாநிலத்தில் 60 கிலோ மீட்டருக்கு 1 சுங்கச்சாவடி என்ற விதியின் அடிப்படையில் அதன் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டுவிட்டது. 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அன்புமணி, 2008ஆம் ஆண்டு விதிகளின் அடிப்படையில் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்