2021-2022 நிதியாண்டில் இந்த மாதம் முடிவடைய இன்னும் 8 நாட்களே உள்ளதால் கீழே குறிப்பிட்டுள்ள முக்கியமான வேலைகளை உடனே முடித்து விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார்-பான் எண் இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் சீக்கிரம் ஆதார் -பான் எண்ணை இணைக்க வேண்டும்.
அப்படி இணைக்கவில்லையென்றால் அபராதம் செலுத்த நேரிடலாம். அதேபோன்று தாமதமான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 31. எனவே இதனை உடனே செய்து முடிக்க வேண்டும். மேலும் வங்கி கணக்குகளில் கேஒய்சி விவரங்களை இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31. எனவே இந்த பணியை உடனே விரைந்து முடிக்க வேண்டும். அபதாரத்தை தவிர்க்க உடனே இந்த பணிகள் எல்லாம் உடனே முடித்து விடுங்கள்.