Categories
மாநில செய்திகள்

பிஎம் கிசன் உதவித் தொகை ரூ.6000 வேண்டுமா…? உடனே இத செய்யுங்க…!!!!

பிரதான் மந்திரி கிசான் உதவித்தொகை பெற தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் ஏற்கனவே 10 தவணைகள் பெற்றுள்ள நிலையில் 11வது தவறுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் உதவி தொகை மூலம் வழங்கும் முறையை மத்திய அரசு தற்போது மாற்று அமைத்துள்ளது. அதாவது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பதினோராவது தவணை  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் வங்கி கணக்குடன் கேஒய்சி எனப்படும் ஆதார் விவரங்களை விவசாயிகள் அப்டேட் செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் www.pmkisan.gov.com இன்று இணையதளத்தில் சென்று’Former corner’ வசதியில்e-kyc விண்ணப்பத்தை கிளிக் செய்து ஆதார் அடிப்படையிலான ஓடிபி சமர்ப்பிக்கலாம். பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு செல்ல வேண்டும். இதற்கிடையே ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம்1,28,000 விவசாயிகள் பயன் பெற்று இருகின்றனர். மத்திய அரசு தற்போது நிதி திட்ட வடிவமைப்பு மாற்றம் செய்துள்ளது. இதுவரை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக விடுப்பு  செய்து வந்த நிலையில் இனி ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும் தற்போது விவசாயிகள் 11வது தவணை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது மிக அவசியமாகும்.

அதனால் தங்களது ஆதார் எண்ணை வங்கி என்னோடு இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆதார் எண்னுடன்  செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் பிரதம மந்திரி கிசான் திட்டம் வலைதளங்களில் தங்களது விரல் கைரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்க்கும் என கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |