தருமபுரியில் நகை கடன் தள்ளுபடி வழங்குவதில் குளறுபடி அதிகாரிகளை கண்டித்து பயனாளிகள் திடீர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகே ரேகடஹள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஹடஹள்ளி ,ஜாலியூர் ,அண்ணாநகர் காந்தி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 400 க்கும் மேற்பட்டோர் தங்களுடைய நகைகளை அடகு வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகைகளை வைத்திருக்கின்ற பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் சங்கத்தில் 120 பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 50 க்கும் மேற்பட்ட வங்கிக் கடன் தள்ளுபடி செய்வது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும்,சில பயனாளிகள் 3½ மற்றும் 4½ பவுன் வைத்துள்ளனர். அதில் அரை பவுன் தங்க நகை கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் குளறுபடி உள்ளதாக அதிகாரிகளை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பயனாளி பேசும்போது “நான் எனது மனைவி இதை ரேகடஹள்ளியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் இரண்டரை பவுன் தங்க நகைகளை அடகு வைத்திருக்கிறேன். இந்த நகையில் அரை பவுன் நகை மட்டும் தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மீதம் இரண்டு பவுன் தங்க நகை தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது 2 பவுன் தங்க நகை செல்வம் என்பவரை ஆதார் எண் ணில் பதிவாகியுள்ளது. உங்கள் ஆதார் எண்னில் இந்த நகை இல்லை எனக் கூறி தள்ளுபடி கடிதம் எழுதிதாருங்கள் என்று கூறியுள்ளார்கள்.
என்னைப் போல் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இதைப்போல பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பலருக்கு ஆதார் எண் மாறியிருக்கிறது. பலருக்கு ரேஷன் எண் மாறியிருக்கிறது. பலருக்கு இன்னும் தள்ளுபடி என்ற பட்டியலில் பெயரை வரவில்லை எனவும் அரசு பணியில் உள்ளவர்கள், விவசாய பயிர்க் கடன் வாங்கி உள்ளார்கள், வசதி படைத்தவர்கள் போன்றோருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களுக்கு நகைக்கடன் முறையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. அதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்து முறையாக ஏழை எளிய மக்களுக்கு நிர்வாக கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். நகை கடன் தள்ளுபடி செய்வதில் குளறுபடி செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.