கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏராளமான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் நாமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் இது போன்ற செயலிகளால் நம் பாதுகாப்பு கேள்வி குறியாகும் அபாயம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools எனும் செயலி தொடர்பாக எச்சரித்துள்ளது. நம் புகைப்படத்தை கார்டூனாக மற்றித் தரும் இந்த செயலியை நாம் பயன்படுத்த பேஸ்புக் கணக்கு வாயிலாக லாகின் செய்யவேண்டும்.
அந்த செயலி நம் கணக்கை பேஸ்புக்கிற்குள் லாக் இன் செய்யாமல் அத்தகவல்களை மற்றொரு சர்வருக்கு அனுப்பி விடுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று நம் கார்டூனாக மாற்றுவதற்கு அப்லோட் செய்யும் போட்டாக்களும் திருடப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது 1 லட்சம் பேர் வரை டவுன்லோட் செய்துள்ள இந்த செயலி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அது நீக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.