Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 அடி நீள வாழைத்தார்….. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

5 அடி நீளத்திற்கு இருந்த வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் ஜக்கார்பாளையத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களுக்கிடையே வாழை சாகுபடி செய்துள்ளார். இதில் ஒரு வாழை மரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளை தள்ளியது.

மேலும் 16 அடுக்குகளில் வாழைக்காய் சீப் இருந்ததை பார்த்து விவசாயி ஆச்சரியமடைந்தார். இது குறித்து விவசாயி கூறும்போது வாழையில் குளைதள்ளியதில் சுமார் 5 அடி நிலத்திற்கு வாழைத்தார் இருக்கிறது. இதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Categories

Tech |