Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரி மாணவர்களுக்காக… நாடாளுமன்றத்தில் எம்பி கோரிக்கை…!!!!

பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதுச்சேரி அந்தமான் யூனியன் பிரதேச மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மக்களவையில் எம்பி வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காலப்பட்டு  பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பாண்டிச்சேரி மத்தியில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நாடு முழுவதில் இருந்தும் சுமார் 5000 மாணவர்கள் உயர்கல்வியில் படித்து வருகின்றனர். இது புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநில மாணவர்களுக்கு பெரிதும் பயன் உள்ள வகையில் உள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின் போது பேசிய புதுச்சேரி எம்பி வைத்தியலிங்கம் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மக்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி, அந்தமான் மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி நாடாளுமன்றத்தில் அவர் பேசியபோது, “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் இருக்கிறது. ஆனால் அங்கு புதுச்சேரி மாணவர்களுக்கு கல்வி இட ஒதுக்கீடு கிடைக்க படவில்லை.

அந்தமான் தீவுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. யூனியன் பிரதேசங்களில் சொந்தமாக பல்கலைக்கழகம் எதுவும் இல்லை. இதனால் அங்கு இருக்கின்ற மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதனால் புதுச்சேரி அந்தமான் மற்றும் லடாக் மாணவர்களும் அங்கு உள்ள பல்கலைக்கழகங்களில் 25 சதவீத விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை” எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |