Categories
மாநில செய்திகள்

காற்று மாசுபாடு கொண்ட நகரமாக… தென்னிந்தியாவின் முதல் இடம்… எது தெரியுமா…?

காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி,  பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் (WHO) காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை. தென்னிந்தியாவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ளது.
மேலும் இந்திய அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பையை அடுத்து நான்காவது இடத்தை ஐதராபாத்  பிடித்துள்ளது. காற்று மாசுபாடு அதிகமாக உள்ள 100 நகரங்களில் அறுபத்தி மூன்று நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு ஐக்யூஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |