Categories
மாநில செய்திகள்

420 பக்க வெள்ளை அறிக்கை…. என்னென்ன அறிவிப்புகள்?…. வெளியான தகவல்…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன.

இந்நிலையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான 420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை அனைத்து எம்எல்ஏக்கள் இருக்கையிலும் வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசாணை வெளியிடப்படாத  அறிவிப்புகள் 20, அதன் மதிப்பீடு ரூ.9,740,73 கோடி. கைவிடப்பட்ட அறிவிப்புகள் 26, அதன் மதிப்பீடு ரூ.5,469,78 கோடி. நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள் 1,167, அதன் மதிப்பீடு ரூ.87, 405 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |