தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாய்குடாவிலுள்ள மரக் கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, மரக்கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையில் இந்த தீ விபத்தில் 15 பேர் உள்ளே சிக்கிய நிலையில், அவர்களில் இருவர் மட்டுமே மீட்கப்பட்டனர். மீதமுள்ள 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விபத்தில் இறந்த 11 பேரின் உடல் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் தீக்காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.