அந்தியூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் முத்துக்குமாரசாமி கோவில் தெருவில் வசித்து வந்தவர் விஜயகுமார்(46). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், சபரி கண்ணன் என்ற மகனும், சுபிக்ஷா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சபரி கண்ணன் நேற்று காலை தூங்கி எழுந்து பார்த்தபோது விஜயகுமார் படுக்கை அறையில் இருக்கின்ற கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்கி கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சபரி கண்ணன் அலறி துடிதுடித்துப் போனார். உடனே இது குறித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து விஜயகுமார் உடல்நிலை சரி இல்லாமல் தற்கொலை செய்து கொண்டாரா? கடன் தொல்லையா? குடும்பபிரச்சனையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று அந்தியூர் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.