சிம்மம் ராசி அன்பர்களே…!!!! இன்று செயல் நிறைவேறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் குடும்ப செலவுகளுக்கு பயன்படும், பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றவும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இன்று சாந்தமாக இருங்கள், அமைதியாக இருங்கள், தெய்வத்தை வணங்குங்கள்.
இன்று தனவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஓரளவு சிறப்பாக இருக்கும். செலவை மட்டும் நீங்கள் தயவுசெய்து இன்று கட்டுப்படுத்தி தான் ஆகவேண்டும். கூடுமானவரை செலவைக் கட்டுப்படுத்தி விடுங்கள். இன்று பிள்ளைகளுக்காக முக்கிய செலவை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள், வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம்