ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததற்கு காரணம் தெரிய வந்துள்ளது.
தனுசை பிரிந்தவுடன் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். தனுஷ் கெரியரில் கவனம் செலுத்தி வந்தாலும் இடைவெளியின் போது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா மகளிர் தினம், ஹோலி, பார்ட்டி என அவருடைய சந்தோஷம் தான் முக்கியமாக இருக்கிறது என கூறி வருகின்றனர்.
நெட்டிசன்கள், தனுஷ் அவ்வப்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை. இதனால் இவர்கள் பிரிவுக்கு ஐஸ்வர்யாதான் பிரச்சனையாக இருப்பாரோ என விளாச ஆரம்பித்தனர். இதை அறிந்த ஐஸ்வர்யா, பயந்துபோய் மகன்களுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகின்றது.