பழனி கோவிலில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதால் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .
பழனி மலை கோவிலில் மூலவருக்குபீடத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ,அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கோவிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6:30 மணி முதல் கோயில் சிறப்பு பூஜைகளும் யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9 :45 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் இருபதாம் தேதி காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.