Categories
சினிமா

தனுஷ் பெயரை நீக்கிய பிறகு…. ஐஸ்வர்யா போட்ட ‘ஒத்த’ போஸ்ட்…. குவிந்து வரும் லைக்குகள்…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா ட்விட்டர் பக்கத்தில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 வருடங்கள் ஆகி கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்குப் பின்னர் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா அண்மையில் தான் இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிட்டு இருந்தார்.

https://www.instagram.com/p/CbXdZ7PvycU/?utm_source=ig_embed&ig_rid=74b584ae-db22-4501-ae31-cf2e25a70aab&ig_mid=2529AE6E-E42F-4884-B347-55191437FF1D

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னுடைய வயிற்றில் குழந்தைகளாக இருக்கும்போது உதை த்தீர்கள். இப்போது என்னை நீங்கள் முத்தமிடுவதை ரசிக்கிறேன். இந்த அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி” என குறிப்பிட்டு இருக்கின்றார். உருக்கமாக பதிவிட்ட ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |