Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்… ஐநா அறிவிப்பு…!!!!

உக்ரைனில் 3.3 லட்சம் பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகள், பெண்கள் போன்றோரை தங்க வைத்துள்ளதாகவும்,மேலும்  3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.

இது பற்றி ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டாபானே டுஜாரிக்  குழந்தைகள் நிதியம் மற்றும் அகதிகளுக்கான முகமை  எனும் ஐநாவின் இரு அமைப்புகள் ஒன்றிணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புகலிடம் அளித்து உள்ளதாக கூறியுள்ளனர். ஐநா உணவு கழகம் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களுக்கு 104 மெட்ரிக் டன் ரொட்டி, பிஸ்கட், 478 மெட்ரிக் டன் கோதுமை மாவு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |