பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது புழுதி பறக்கிறது. இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்கள் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.