உலக தண்ணீர் தினத்தையொட்டி, இன்று பல்வேறு தலைவர்கள் நீரின் அவசியம் தொடர்பாக மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “நீரின்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவரின் நெறிப்படி இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து, மேம்படுத்தி தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம்.
மேலும் மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது. அதனை தொடர்ந்து நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம்” என்றார்.