Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்” பெற்றோர்கள் இதை கண்டிப்பா செய்யுங்கள்…. தலைமை ஆசிரியர் அறிவுரை….!!

வால்பாறை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுவதை அனுமதிக்காதீர்கள் என பெற்றோர்க்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியுள்ளனர். 

கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசு கல்வித் துறை உத்தரவுபடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதனையடுத்து பெற்றோரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது , அதாவது பிள்ளைகளின் கல்வி நலனில்  பெற்றோர்கள் அக்கறை காட்ட வேண்டிய காலம் இது. இன்றைய காலகட்டத்தில்  நாளுக்கு நாள் சமூக வலை தளங்கள் நிறைய உருவாகி வருகின்றன.

இதனால்  பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.  மாணவ மாணவிகளின் கல்வி நலனில்  ஆசிரியர்  நாங்கள் சிறப்பு முயற்சி மேற்கொண்டாலும்,  பெற்றோரும் அக்கறை காட்ட வேண்டும்.மேலும் பள்ளிக்கு  பிள்ளைகள் வரக்கூடிய நேரம் மற்றும் வீட்டுக்கு செல்ல கூடிய நேரம் ஆகியவற்றை நீங்கள் கண்காணிக்க வேண்டும். தினமும் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் விவரங்களை கேட்டுக் கொள்ளுங்கள் மற்றும் மாதத்திற்கு 2 முறை பள்ளிக்கு சென்று  பிள்ளையின் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் எந்த பாடத்தில் மதிப்பெண் குறைவாக இருக்கிறார்களோ, அந்த பாடத்திற்கு  சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.  குறிப்பாக பெண் பிள்ளைகள் மீது கவனம் அதிகம் செலுத்துங்கள். அதாவது பெண்பிள்ளையிடம் செல்போன் பயன்படுத்துவதை குறைக்க சொல்லுங்கள். மேலும்  மோட்டார் சைக்கிளில் வீட்டில் உள்ளவர்கள் தவிர வேறு யாருடன் செல்ல அனுமதிக்காதீர்கள். பெண் பிள்ளைகள் பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை  அடிக்கடி வாங்கி பாருங்கள். அவ்வாறு நீங்கள் பார்க்கும் போது பிள்ளைகள் செயலில் ஏதாவது சந்தேகம் வந்தால் பள்ளிக்கு வந்து ஆசிரியரை  சந்தித்து பேச வேண்டும்  என  அவர் கூறினார்.

Categories

Tech |