எரி பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூபாய் 965 க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலை இவ்வாறு உயர்ந்திருப்பது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சமையல் எரிவாயு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் 225 உயர்த்தப்பட்டுள்ளது. இது சில தவணைகளாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலைகளும் 136 நாட்களுக்குப் பிறகு லிட்டருக்கு முறையே 76 காசுகளும், 77 காசுகளும் இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.