Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 10000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!!

உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த 10000 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் தான் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்நகரத்தில் சுமார் மூன்று வாரங்களாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன.

ரஷ்யப்படையினர் அந்த நகரத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டின் அதிகாரிகள், அந்த நகரத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு  முயன்றனர். எனினும், தொடர் தாக்குதல்களால் மக்களை வெளியேற்ற முடியவில்லை. இந்நிலையில், ரஷ்யா, மரியுபோல் நகரத்திலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டுமெனில் உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை போட்டுவிட்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைய வேண்டும் என்று கூறியது.

அதனை உக்ரைன் மறுத்திருக்கிறது. இந்நிலையில் நேற்று உக்ரைன் நாட்டில் ரஷ்யாவை சேர்ந்த 9,861 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 16,153 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மொத்தமாக இந்த போரில் பலியான ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |