நடிகர் அருண் விஜய் ரசிகரின் பிறந்தநாளை அறிந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
பிரபல நடிகரான அருண் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் தொலைபேசி வாயிலாகவும் வீடியோ கால் மூலமாகவும் உரையாடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்புவதால் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இவரின் யானை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அனைத்து ரசிகர் மன்றங்களையும் நேரில் சென்று பார்ப்பதாக திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க சென்றபோது ரசிகர் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த அருண்விஜய், கேக் வெட்டி கொண்டாடி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.