இந்தியாவிற்கு இனிவரும் கொரோனாவினால் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையை எதிர்த்து முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எழுச்சி பெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக எதிர்காலத்தில் வரும் அடுத்தடுத்த அலைகளில் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.அதன்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய்ராய் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, இந்தியா மிகவும் அழிவுக்கு காரணமான கொரோனா 2-வது அலையையே சந்தித்து உள்ளது. அது நமக்கு பெரிய பலம் .ஏனெனில் இயற்கை தனது நீண்டகால பாதுகாப்பை வழங்குகிறது என்றும் தடுப்பூசியும் அதிக பாதுகாப்பு கொடுக்கிறது. எனவே எதிர்காலத்தில் வருகின்ற கொரோனாவின் கடுமையான தாக்கமானது சாத்தியம் இல்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளார். மேலும் முக கவசம் உத்தரவை மட்டும் அரசு தளர்த்த பரிசீலிக்கலாம்.
இதனை தொடர்ந்து டாக்டர் சந்திரகாந்த் லஹரியா தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளதாவது, ஒமைக்ரான் பரவல் பற்றிய செரோ சர்வே, தடுப்பூசி பாதுகாப்பு உள்ளிட்ட தரவுகளை நாங்கள் ஆராய்ந்ததில், இந்தியாவில் கொரோனா முடிந்து விட்டது என்று முடிவு செய்வது தர்க்கரீதியானது. எனவே பல மாதங்களுக்கு புதிய எழுச்சிக்கோ, புதிய உருமாறிய கொரோனாவுக்கோ வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் கட்டாய முக கவச உத்தரவை தளர்த்தலாம் என தெரிவித்துள்ளார்.