Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பார்த்திபன் போட்ட ட்விட்… “அந்த ஒரு வார்த்தையால் உருவான சர்ச்சை”…!!!

பார்த்திபன் ட்விட்டரில் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து பார்த்திபன் இயக்கி அவரே நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து முதல்பார்வை வெளியானது. இந்நிலையில் டுவிட்டரில் பார்த்திபன் பகிரந்த பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

அவர் அதில் கூறியுள்ளதாவது, “நேற்று மணி சார் வெளியீட்டுக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது-முழுவதும் organic! முடிந்தவரை நானும் retweet’s செய்தேன். இயன்றவரை பரப்புங்கள் இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய படமாக இருக்கும் பலரும் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே!” என்று பதிவிட்டிருந்தார். இவர் ஆர்கானிக் என்று பதிவிட்டு இருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் விஜய்யின் ஜாலியோ ஜிம்கானாவின் பார்வையானது போலி என குறிக்கும் வகையில் இந்த பதிவானது இருப்பதாக விஜய் ரசிகர்கள் பார்த்திபன் மீது கோபத்தில் இருப்பதோடு அவரை திட்டி வருகின்றனர்.

 

 

 

Categories

Tech |