பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே மோட்டூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக உடல்நலக் கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜெயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து சிப்காட் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.