நாம் அறியாத டீயை பற்றிய அதிர்ச்சி தகவல்…
காலையில் இருந்து இரவு வரை கடினமா உழைக்குறவங்களும் சரி சோம்பேறியாக தூங்குறவங்களும் சரி எல்லாருக்கும் புத்துணர்ச்சி கொடுக்குற ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் ஒரு கப் டீ. ஆனால் இந்த டீ நாம் வாழ்க்கையே அளிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? தேயிலை பொடியில் நம் உயிரையே குடிக்க கூடிய பல ரசாயன பொருட்களை மறைத்து வைத்துள்ளனர்.
இதை பற்றின தெளிவான தொகுப்புரை…
நமக்கு புத்துணர்ச்சி தருகிறது என்பதற்காகவும், குளிரை கட்டுப்படுத்துது என்பதற்காகவும், ஏன் சிலர் ஸ்டேட்டஸ் போடுவதற்காகவும் டீயை ஒரு கப்பில் ஸ்டைலாக வைத்து குடிப்பார்கள். அப்படிப்பட்ட டீயில் கலக்க கூடிய தேயிலை அரைத்து பல பிராண்ட்களில் விற்கிறார்கள். அந்த தேயிலையில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட 15 ரசாயனங்களை நறுமணத்துக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கின்றனர்.
இரவு வேலை செய்பவர்கள் புத்துணர்ச்சிக்காக இந்த டீயை குடிக்கின்றனர் இன்று வேண்டுமானால் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கலாம் ஆனால் சிறிது நாட்களில் உங்களுடைய புத்துணர்ச்சி நீங்கி உடல் சோர்வாகிவிடும். அதுமட்டுமில்லாமல் பல நோய்களுக்கு நீங்களே வாசலை திறந்து வைத்தது போல் ஆகிவிடும்.
தேயிலை என்பது முன்னாடி சித்தர்களால் ஒரு மூலிகையாக தான் பார்க்கப்பட்டது. அது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்க வேண்டிய அவசியமான ஒரு பருகுநீராகவே பார்க்கப்படவில்லை. தேயிலையில் டீ வெச்சு குடிக்க என்றோ ஒருநாள் மருத்துவத்துக்காக சித்தர்கள் சொல்லி இருந்ததை, இந்த காலத்தில் நாம் எல்லாரும் என்ன பண்ணியிருக்கோம் என்றால் அதை தொடர்ச்சியாக குடிப்பதாக மாற்றியுள்ளோம் அதன் விளைவாகவே பலரும் பல நோய்களால் பாதிக்க படுகின்றனர்.
இனியேனும் எச்சரிக்கையுடன் செயல் படுவோம்..!!