Categories
உலக செய்திகள்

ரஷ்யா செய்வது மிகப்பெரிய போர் குற்றம்…. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்…!!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், ரஷ்ய நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் அறிவிப்பது தொடர்பில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது அதிகமாக பொருளாதார தடைகளை அறிவிப்பது  தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இதில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கைக்கான செயலாளரான ஜோசஃப் போரெல் பேசியதாவது, உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரில் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கிறது. மேலும், குண்டுவீச்சு தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றம் என்று கூறினார்.

அதன்பிறகு லிதுவேனியா மற்றும் அயர்லாந்தின் வெளியுறவு மந்திரிகள் பேசினர். அவர்கள், ரஷ்யாவின் எரிசக்தித்துறையை குறிவைத்து பொருளாதார தடைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகமான நாடுகள் தங்களின் தங்களின் எரிவாயு தேவையில் 40 சதவீதத்திற்கு ரஷ்யாவை நம்பியிருக்கின்றன.

இந்நிலையில், ரஷ்ய நாட்டின் எரிசக்தித்துறையை குறிவைப்பது என்பது 27 நாடுகளை உடைய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடினமானதாக இருக்கும். ஆனால், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்ய நாட்டிலிருந்து மொத்தமாக எண்ணெய் இறக்குமதியை தடை செய்திருக்கின்றன.

Categories

Tech |