Categories
உலக செய்திகள்

மரியுபோல் பள்ளியின் மீது ரஷ்யா குண்டு வீச்சு…. உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

400 பேர் தங்கி இருந்த மரியுபோல் பள்ளியின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சம் அடைகின்றனர். இந்நிலையில் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்யா தொடர்ச்சியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கிட்டத்தட்ட 400-க்கும் அதிகமானோர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த பள்ளி மீது ரஷ்யப் படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மரியுபோல் நகரின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்துள்ளது. அதன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கியிருப்பதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |