Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. வருகிறது அசானி புயல்…. பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

அந்தமான் பகுதிகளில் அசானி புயல் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி, நேற்று முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக மெதுவாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் ‘அசானி புயல்’  என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்கதேச கடற்கரையை நோக்கி புயலானது நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருகிறது. இதையடுத்து இந்த புயலானது மேலும் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், வடக்கு மியான்மர், வங்கதேசம் இடையே கடலோரப் பகுதிகளில் (மார்ச் 22) நாளை கரையை கடக்கும் எனவும் இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை அடுத்து அசானி புயலால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் இன்றும்,நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றானது வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், அனைத்து சுற்றுலா தளங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்காலிக முகாம்களானது அந்தமான் நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |