மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதில் கேரள அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலத்தின் மின்சாரத்துறை மந்திரியும் மற்றும் சித்தூர் தொகுதியின் எம்எல்ஏவுமான கிருஷ்ணகுட்டி செய்தியாளரிடம் கூறியுள்ளதாவது, வெயிலின் தாக்கம் தற்போது கேரளாவில் அதிகமாக இருக்கிறது என்றும் மேலும் அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறியுள்ளார். இதை அடுத்து குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து தற்போது தண்ணீரானது திறக்கப்படவில்லை.
இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து அணைகளிலும் தேவையான அளவு நீரானது தற்போது இருக்கிறது. இதனால் மின் உற்பத்தியானது அணைகளிலிருந்து எடுக்க முடியும். எனவே இந்த ஆண்டு கேரளாவில் கட்டாயம் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
மேலும் மின்சாரத்தை பயன்படுத்துவதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சில கட்டுப்பாடுகள் கொண்டுவருவதற்கான ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமல்ல வெயிலின் தாக்கத்தால் பகலில் மின்சாரத் தேவை அதிகமாக இருப்பதால் மின்கட்டணத்தை உயர்த்த கூடிய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.