Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது அசானி’ புயல்…. தமிழகத்தில் 4 நாட்கள்…. அலெர்ட்…. அலெர்ட்…..!!!!!

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியது. இதையடுத்து இது நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அதன்பின் காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக நேற்று மேலும் வலுப்பெற்றது. இந்நிலையில் அந்தமான் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் இன்று (மார்ச் 21) அசானி புயல் உருவாகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |