முஸ்லீம் அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு முத்தவல்லி அப்துல் சமது தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் முத்தவல்லிகள் சர்க்தார், சம்சுதீன், தாஜுதீன், சாதிக், முபராக், சார்புதின், மத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஹிஜாப் என்பது எங்கள் உரிமை அதை கொடுப்பது அரசின் கடமை போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.