பாகிஸ்தான்-இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் ராணுவ தளவாட சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது இது பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும்.
அங்குள்ள வெடி மருந்துகள் சேமிக்கும் பகுதியில் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதோடு அடுத்தடுத்து வெடி சத்தம் கேட்டு கொண்டே இருந்தது என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்தன.