மனைவி கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பல்லவராயன் பட்டியில் கூலி தொழிலாளியான பொன்னையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று பொன்னையன் மீண்டும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அழகம்மாள் அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பொன்னையனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகம்மாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.