இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் தாலாட்டு பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி விபவரி பாடியிருந்தார். அப்போது அனைவரும் பாட்டை மெய்மறந்து கேட்டனர்.
https://twitter.com/lingaa_twits/status/1504894678088687621?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504894678088687621%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Factor-dhanush-sung-in-ilayaraja-live-concert%2Farticleshow%2F90324100.cms
தனுஷும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.பாடல் முடிந்தவுடன் தனுஷ் மேடைக்குச் சென்றார். அப்போது இசைஞானியிடம் உங்களோட “நிலா அது வானத்து மேலே” பாடலின் மெட்டில் தாலாட்டு பாடல் ஒன்று யாத்திரா மற்றும் லிங்காவிற்காக எழுதியுள்ளேன் என்று கூறினார். பிறகு இளையராஜா அனுமதியுடன் பாடலை தனுஷ் பாடினார். அவர் பாடியது மிகவும் மென்மையாக இருந்தது. இதனைக்கேட்ட ரசிகர்களும் தனுஷின் மகன்களும் மெய்மறந்து கேட்டனர். இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தனுஷின் இந்த பாடலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.