2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டாவது, மூன்றாவது பிளாட்பாரங்களில் மறைவான பகுதிகளில் சிறுசிறு மூட்டைகளாக வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசனிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயிலின் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.