Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போக்குவரத்திற்கு இடையூறு…. வியாபாரிகளுக்கு ஆலோசனை கூட்டம்…. போலீஸின் செயல்…‌.!!

சாலையோரத்தில் இருந்த கடைகளை காவல்துறையினர் அகற்றினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பஜார் பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோர கடைகளை அகற்றுவதற்கும், சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகளில் முகப்புகள் அகற்றுவதற்கும் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தனர். இந்நிலையில் நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சாலையோரத்தில் இருந்த நடைபாதை கடைகள் மற்றும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்.

இதனை அடுத்து சாலையோரத்தில் இருந்த பேனர்களை முற்றிலுமாக காவல்துறையினர் அகற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு சில இடத்தில் வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களை காவல்துறையினர் சமாதனம் செய்து நடைபாதை கடை வியாபாரிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |