அமெரிக்காவை எதிர்த்து இந்தியா ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது, அமெரிக்காவும் ஐரோப்பியாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யா கடும் நெருக்கடியில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு இடையே ரஷ்யா தள்ளுபடி விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்து உள்ளது. ஆனால் இந்த முடிவு அமெரிக்காவிற்கு அதிருப்தியே ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்து உள்ளது. இதன்படி தள்ளுபடி விலையில் வாங்கும் கச்சா எண்ணெய் விரைவில் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதையே பெரிதும் நம்பியுள்ளதாக கூறப்படுகிறது.