Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு வேலை வேண்டுமா?…. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசர கால மருத்துவ உதவி மற்றும் மனநல ஆலோசனை, தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்கி அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சகி அம்மா சேவை மையம் இயங்கி வருகின்றது.

இந்த சேவை மையத்தில் பணியாற்ற ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் அலுவலகத்தில் தங்களுடைய சுய விபரங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். வழக்கு பணியாளர் 2 பேரிடம் காலியாக உள்ளது. 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தப் பணியானது 24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் அமர்த்தப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உள்ளுறை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு தொகுப்பு ஊதியம் 12,000 மற்றும் சிறப்பு ஊதியம் 3000 வழங்கப்படும். பல்நோக்கு உதவியாளர் பணியிடம் -1 , கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி தோல்வி. வயது இருபது வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்த பெண் பணியாக இருக்க வேண்டும். இவர்களுக்கு தொகுப்பூதியமாக 6,400 ரூபாய் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் பாதுகாவலர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி தோல்வி.வயது 20 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தொகுப்பூதியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம், நீலா தெற்கு வீதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |