Categories
உலக செய்திகள்

உக்ரைனில்… “முதல் முறையாக புதிய ஏவுகணை தாக்குதல்”…. ரஷ்யாவின் அதிரடி….!!!

ரஷ்யா உக்ரைனில் கின்சல் ஏவியேஷன் ஏவுகணை கொண்டு விமான வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஏவுகணைகளை  அளிதுள்ளதாக ரஷ்யா பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 24 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உக்ரைனில் மேற்கே உள்ள ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கை அளிக்க தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் புதின் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய உரையில் வெளியிட்ட புதிய ஆயுதங்களில் வரிசையில் கின்சல் ஏவுகணையும் ஒன்று. இந்த கின்சல் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடித்து மற்றும் ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் பறக்கும்.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் கின்சல் ஏவியேஷன் ஏவுகணையை பயன்படுத்தி விமான வெடிமருந்துகள் கிடங்கு மற்றும் ஏவுகணைகளை  அளிதுள்ளதாக ” தெரிவித்துள்ளது.

Categories

Tech |