Categories
உலக செய்திகள்

“மீண்டும் ராணுவத்தில் சேர்ந்த 98 வயது முதாட்டி”…. எதற்கு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

உக்ரைன் சேர்ந்த பாட்டி தனது தாய் நாட்டை காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் சேர முன்வந்தார்.

ரஷ்யா உக்ரைன் மீது 24 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினால் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக போராடுவதற்கு உக்ரைனில் உள்ள 98 வயதான பாட்டி ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்கேற்ற ஒரு போர் வீரர் ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா  98 வயதான பாட்டி. இவர் தற்போது தனது தாய் நாட்டை காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் சேர முன்வந்தார். ஆனால் அவரது வயது காரணமாகா துரதிர்ஷ்டவசமாக  மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக உக்ரைன் வெளியூர் அமைச்சகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா தனது வாழ்க்கையில் இரண்டாம் உலகப் போரில் வீராங்கனை இரண்டாவது முறை போரை எதிர் கொண்டார். இந்நிலையில் அவர் மீண்டும் தனது நாட்டை காப்பாற்றுவதற்காக தயாராக இருந்தாள். ஆனால் அவருக்கு எல்லா அனுபவமும் இருந்தும் வயது காரணமாக மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா கியேவில் மற்றொரு வெற்றியைக் கொண்டாடுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.

Categories

Tech |