நடிகை சமந்தா சூர்யாவின் தீவிர ரசிகையாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனது பள்ளி பருவ காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பள்ளியில் படிக்கும்போது நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாம். சமந்தா முதல் முதலில் தியேட்டரில் பார்த்த முதல் படம் சூர்யாவின் காக்க காக்க திரைப்படம் தானாம். இந்த திரைப்படத்தை பார்த்ததிலிருந்து சூர்யாவின் தீவிர ரசிகையாக மாறினாராம். சமந்தா கல்லூரியில் படிக்கும்போது சூர்யா சிறப்பு விருந்தினராக வந்தாராம்.
அப்போது சமந்தாவும் அவரது நண்பர்களும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்வார்களாம். அதன்பின்னர் சமந்தாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். சூர்யாவுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பதே தனது அதிகப்படியான ஆசையாக இருந்த சமந்தா அவருடன் இணைந்து அஞ்சான், 24 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். அவருடன் ரசிகையாக இருந்த நான் அவருடன் ஜோடியாக நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை என கூறியிருக்கின்றார் சமந்தா.