நீதிபதியின் கணவரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நிதித்துறை நடுவராக பணிபுரியும் நர்மதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 பேரும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பாலாஜி, கார்த்திக் என்ற இரண்டு வாலிபர்கள் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு விளையாடி உள்ளனர்.
இதனால் நவீன்குமார் அவர்களிடம் வழி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் பாலாஜி வழி விடாமல் நர்மதாவிடம் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் நவீன்குமாருக்கும் வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி மற்றும் கார்த்திக் நவீன்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து நவீன்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கார்த்திகை தீவிரமாக தேடி வருகின்றனர்.