‘கா’ திரைப்படதின் டீஸ்சர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்தநிலையில் ஆண்ட்ரியாவின் ஆக்ஷன் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள ‘கா’ திரைப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து நாஞ்சில் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கமலேஷ், சலீம் கவுஸ், நவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் ஆண்ட்ரியாவின் ‘கா’ திரைப்படத்தின் ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.